நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
காசநோய் விழிப்புணர்வு முகாம்
உலக காசநோய் வாரவிழாவையொட்டி மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சி மையத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதையொட்டி செவிலிய மாணவிகளுக்கு வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் கணபதி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
உறுதிமொழி
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி பள்ளி முதல்வர் கவுசல்யா, நல கல்வியாளர் ராமச்சந்திரன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கபில், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முரளிதரன், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.