நாமக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
நாமக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் திடீரென ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் திடீரென ஆய்வு செய்தார்.
ஆய்வு
சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் கீதா நாமக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி தமிழக அரசின் பசுமை வழிச்சாலைகள் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக வள்ளிபுரம்-பாலப்பட்டி சாலை ஓரங்களிலும், நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டார்.
அறிவுறுத்தல்
பின்னர் பயணியர் மாளிகை வளாகத்தில் அவர், நாமக்கல் கோட்டத்தில் பணிபுரியும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு சாலை பணிகள் நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய தரக்கட்டுப்பாடு வழிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அறிவுரைகளை வழங்கி, தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் நிதிலன் மற்றும் நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.