மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சாமி வீதியுலா
பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சாமி வீதியுலா நடைபெற்றது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாலை சாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.