டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி கொள்ளையடித்த 2 பேர் கைது

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த 2 பேரை 3 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-02-20 17:47 GMT
நெமிலி

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த 2 பேரை 3 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த துறையூரில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி இரவு வேலை நேரம் முடிந்ததும் விற்பனையாளர் ஞானவேல் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்து தாக்கிய 2 பேர் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். 


இந்த நிலையில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ், யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருமால்பூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டவுடன் மோட்டார்சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலிசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். 

விசாரணை செய்ததில் அவர்கள் பள்ளூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 19), கோவிந்தவாடியகத்தை சேர்ந்த பாரிவேந்தர் (19) என்பது தெரியவந்தது. 

மேலும் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் துறையூர் டாஸ்மாக் விற்பனையாளர் ஞானவேலுவை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதையும் பள்ளூர் டாஸ்மாக் விற்பனையாளர்கள் தணிகாசலம் மற்றும் கருணாகரன் ஆகியோரை தாக்கி கொள்ளை அடிக்க முயற்சித்ததையும் ஒப்புக்கொண்டனர்் 
இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து மோட்டார்சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்