கோட்டப்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை
கோட்டப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பெரியப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா. இவர், மனைவி மற்றும் மகள்களுடன் திருப்பூரில் தங்கி தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவருடைய மகள் அனுஸ்ரீ (வயது 13). சிறுமி திருப்பூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி, பெரியப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து இருந்தாள். சம்பவத்தன்று மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.