கமுதி,
கமுதி அருகே மண்டல மாணிக்கத்தை சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்தி சென்றனர். அப்போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில் காரில் மணல் கடத்தியது தெரியவந்தது. அப்போது காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி விட்டு காரில் வந்தவர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித் தனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கமுதி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.