காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன், நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் சேதுபாண்டியன், காருகுடி சேகர், விஜயரூபன், மகளிரணி தலைவர் பெமிலா, மாவட்ட இளைஞரணி தலைவர் சரவண காந்தி, மாநில மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டெல்லியில் போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாத யாத்திரை செல்ல முயன்றனர். அப்போது பஜார் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரசார் சிலருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரையும் போலீஸ் வகானத்தில் ஏற்றி அழைத்து சென்று திருமணமகாலில் அடைத்து வைத்தனர். பின்னர் போலீசார் அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.