கஞ்சா வைத்திருந்தவர் பிடிபட்டார்

கஞ்சா வைத்திருந்தவர் பிடிபட்டார்

Update: 2021-02-20 15:09 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோமன் சர்ச் அருகில் வங்கி யின் எதிர்புறம் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்த னர். அவரிடம் விசாரித்தபோது மதுரை கீழக்குயில்குடி மொட்டைமலை பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் சுரேஷ் (வயது40) என்பது தெரிந்தது. மதுரையில் இருந்து இந்த கஞ்சாவை கொண்டு வந்து ராமநாதபுரம் பகுதியில் விற்பனை செய்வ தற்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்