பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக மீன்கள் அருங்காட்சியகம் 10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டுள்ள கல்லால் ஆன மீன்களின் ராணியான விக்டோரியா மகாராணி மீன், பெரிய களவாய் மீன், அரிய வகை கடல் பாம்பு, கடல் குதிரை, கடல் தாமரை உள்ளிட்டவைகளை படத்தில் காணலாம்.