பரமக்குடி,
பரமக்குடி லீலாவதி நகரை சேர்ந்தவர் கோபி (வயது40) பழைய பேப்பர் வியாபாரி. இவரது மனைவி மீனாள் (32). இவர்கள் இருவரும் வேந்தோணி விலக்கு நான்குவழிச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் விஜயவாடா பகுதியை சேர்ந்த முகமது ஜாபீரை போலீசார் கைது செய்தனர்.