சேத்துப்பட்டு; பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேத்துப்பட்டு அருகே சாலையோர ஓட்டலில் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தில் பிரசாந்த், வினோத் ஆகியோர் சாலையோரம் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
10-ந்தேதி இரவு 11 மணியளவில் 5 பேர் கொண்ட வாலிபர்கள் மோட்டார்சைக்கிள்களில் ஓட்டலுக்கு வந்தனர். அவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது? எனக் கேட்டனர்.
சாப்பிட ஒன்றும் இல்லை எனக்கூறியதும், திடீரெனக் கத்தியை காட்டி மிரட்டி ஓட்டலில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கும்பலைச் சேர்ந்த ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்தநிலையில் சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் வந்தவாசி ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த மகி என்ற மகேஷ் (வயது 20) என்றும், நம்பேடு கிராமத்தில் சாலையோர ஓட்டலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.