மருந்து கடையில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்
மருந்து கடையில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்
சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.18 ஆயிரத்து 500 திருட்டு போனது. இதுதொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை தனிப்படை போலீசாரிடம் சிக்கிய வாலிபரிடம் விசாரித்தபோது, சேலம் மருந்து கடையில் பணம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் தனிப்படை போலீசார் மதுரை விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.