பூண்டி ஏரி மதகில் பழுது; அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

பூண்டி ஏரியில் இருந்து நீரியல் நீர் நிலையியல் ஆய்வு கூடத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகில் பழுது ஏற்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-02-20 00:58 GMT
மதகில் பழுது
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். 1944-ம் ஆண்டு ஏரியின் இடது புறத்தில் நீரியல் நீர் நிலையியல் ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கு பூண்டி ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை பயன்படுத்துவது வழக்கம். இதற்காக நீர்த்தேக்க இடதுபுறத்தில் மதகு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் ஆய்வுக்காக தண்ணீர் திறந்து விடப்படும் மதகில் நேற்று முன் தினம் இரவு பழுது ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டது.

அதிகாரிகள் நடவடிக்கை
தகவல் கிடைத்தவுடன் நேற்று கொசஸ்தலை ஆறு வடி நில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து பழைய மதகை அகற்றி புதிய மதகை அமைத்தனர்.

மேலும் செய்திகள்