போஜீஸ்வரர் கோவிலில் 1008 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம்
போஜீஸ்வரர் கோவிலில் 1008 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம்;
சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள போஜீஸ்வரர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி 1008 கலசங்கள் வைத்து நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) இரண்டாம் காலபூஜை காலை 6 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெறுகிறது. விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், சுவாமிஆவாகனம், ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.