சிறுகாம்பூர் அரசு பள்ளியில் நூலகம் திறப்பு
சிறுகாம்பூர் அரசு பள்ளியில் நூலகம் திறப்பு;
கொள்ளிடம் டோல்கேட்,
சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் திருப்பதி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சிவராசு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் மாணவரும், குணசீலம் ஊராட்சி தலைவர் குருநாதன் பள்ளி பராமரிப்பு செலவுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டரிடம் நன்கொடையாக வழங்கினார். கவிஞர் நந்தலாலா வாழ்த்தி பேசினார். களம் இலக்கிய அமைப்பு நிர்வாகி துளசிதாசன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் முன்னதாக சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிலூயிஸ்மத்தியாஸ் வரவேற்றார். முடிவில் களம் இலக்கிய அமைப்பு நிர்வாகி சரவணகுமார் நன்றி தெரிவித்தார்.