தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது.;

Update: 2021-02-19 21:33 GMT
திருச்சி, பிப்.20-
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருச்சி, காட்டூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் கருணாகரன் தலைமை தாங்கி மாணவிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார். மேலும் உதவி இயக்குநர் கலைச்செல்வம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் ஆகியோரும் பேசினா். போட்டித்தேர்வு, உயர்கல்வி நுழைவுதேர்வு, சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து கருத்தரங்கில் விளக்கி பேசப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வரவேற்று பேசினார்.

மேலும் செய்திகள்