சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2021-02-19 21:32 GMT
திருச்சி, 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட குழுமமும், சுற்றுச்சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறையும் மற்றும் திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.ஐ.ஜி. ஆனி விஜயா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சாலைபாதுகாப்பின் அவசியம் குறித்து நாட்டு நலப்பணி தொண்டர்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், அது குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டுப்நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா வரவேற்று பேசினார். தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள், சாலைபாதுக்காப்பு குறித்த மவுன நாடகத்தை பொதுமக்களுக்கு நடத்தி காண்பித்தனர். நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன், செங்குட்டுவன், பல்கலைக்கழக பேராசிரியை தாமரைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள், அரசு கலைக்கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்