திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-02-19 21:32 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
மாரியம்மன் கோவில் 
திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
சாமி தரிசனம் 
பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற ெகாடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வருகிற 26-ந் தேதி மாசி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்