கடற்கரைக்கு வந்த 7 அடி நீள கடல் பாம்பு

கடலூர் ராசாப்பேட்டையில் கடற்கரைக்கு 7 அடி நீள கடல் பாம்பு வந்தது.;

Update: 2021-02-19 21:29 GMT
கடலூர், 

கடலூர் துறைமுகம் ராசாப்பேட்டையில் அவ்வப்போது ஆமைகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7 அடி நீளமுள்ள கடல் பாம்பு ஒன்று கரைக்கு வந்தது. இதனை அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுபற்றி பாம்பு பிடி ஆர்வலர் செல்லா கூறுகையில், கடலில் பாம்புகள் இறையை விழுங்கிய பின்னர் மூச்சுத்திணறல் ஏற்படுவதுண்டு. அவ்வாறு மூச்சுத் திணறல் ஏற்படும்போது பாம்புகள் கரைக்கு வந்து சற்று இளைப்பாறி விட்டு செல்லும். அந்த வகையில் இந்த கடல் பாம்பும் ராசாபேட்டை கடற்கரை பகுதிக்கு வந்தது. இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் யாரையும் கடிக்காது. இந்தக் கடல் பாம்பு வலாகடையன் பாம்பு வகையறாவை சேர்ந்ததாகும் என்றது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அந்த கடல் பாம்பு கடலுக்குள் சென்று விட்டது.

மேலும் செய்திகள்