நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Update: 2021-02-19 19:19 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை உரிமையாளர்களுக்கு, கடையின் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் பேசுகையில், திருடர்களிடம் இருந்து கடையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து நகை விற்பனை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்