மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது; டிராக்டர் பறிமுதல்

மருதையாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-02-19 19:11 GMT
பெரம்பலூர்:

மணல் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றில் டிராக்டரில் மணல் திருடுவதாக மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் தலைமையில் போலீசார், மருதையாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மணல் திருடி டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கூடலூரை சேர்ந்த அலெக்சாண்டர், செந்தமிழ் செல்வன், கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆனந்தபாபு, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்