வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம்
வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து போடும் இயக்கம், ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் கணபதி தலைமை தாங்கினார். ஆண்டிமடம் பகுதி கிராம வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியமாக ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முன்னதாக வட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார். இதில் அனைத்து கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.