மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது

மன்னார்குடி அருகே மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி- மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-02-19 18:26 GMT
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி- மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மயில்வேட்டை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தலையாமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக   மோட்டார்சைக்கிளில் வேகமாக 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது  அவர்களிடம் உயிரிழந்த நிலையில் 3 மயில்கள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து  தலையாமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருமக்கோட்டை திருமேனிஏரிக்கரை பகுதியை சேர்ந்த இளங்குமரன்(வயது35) மற்றும் முருகேசன்(19) என்றும் சோழபாண்டி பகுதியில் இருந்து மயில்களை 
துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து இளங்குமரன், முருகேசன் ஆகிய இருவரையும் மன்னார்குடி வனச்சரக அதிகாரி மணிமாறனிடம் போலீசார் ஒப்படைத்தனர். வனச்சரக அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் மயில்களை சுட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள

மேலும் செய்திகள்