மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-19 18:22 GMT
காரைக்குடி,

காரைக்குடி ெரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் சோலை. இவர் வ.உ.சி.சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கடை வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றவர் சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் சோலை புகார் செய்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி முத்துபட்டணத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

மேலும் செய்திகள்