வேலூரில் புவி வெப்பமயமாதலை தடுக்க சட்டக் கல்லூரி மாணவர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
புவி வெப்பமயமாதலை தடுக்க சட்டக் கல்லூரி மாணவர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
காட்பாடி
வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்தவர் சோமு.ஆட்டோ டிரைவர். இவரது மகன் ராகுல் கனேஷ். இவர் காட்பாடியில் உள்ள அரசு சட்டகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் மரக்கன்றுகளை நட்டு தூய்மையான காற்றை பெறவும், மழை வளத்திற்கு உதவிடுமாறும், பிளாஸ்டிக்கை முழுமையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சட்ட கல்லூரி மாணவரின் ஓட்டம் காட்பாடி முதல் அரியூர் மலைகோடி வரையில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடினார்.