பர்கூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
பர்கூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கரடிகொல்லப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மொபட்டில் கல்லாவி-மொரப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேடியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.