மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
செஞ்சி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள சிறுவாடி காப்புக்காட்டில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய உடல் அருகே மதுபாட்டில், விஷ பாட்டில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை பார்வையிட்டு, அவரது சட்டைபையில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், திருவண்ணாமலை மாவட்டம் கருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான முருகன் (வயது 40) என்பதும், அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.