சங்கராபுரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
சங்கராபுரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் அரசு மருத்துவமனை, முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் ராஜமோகன் தலைமையிலான குழுவினர் நேற்று சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்குகளில் ஆய்வு செய்தனர். அப்போது டிப்ளமோ மருத்துவ ஆய்வக தொழில்நுட்புனர் படிப்பு முடித்த வெங்கடேசன்(வயது 53) என்பவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதேபோல் சங்கராபுரம் அரசு மருத்துவமனை எதிரில் அதேபகுதியை சேர்ந்த ரஞ்சன் மகன் நார்ட்டம் பிஸ்வாஸ்(34) என்பவர் பிளஸ்-2 முடித்துவிட்டும் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்த தனித்தனி புகார்களின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுக்கத்அலி, ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், நார்ட்டம் பிஸ்வாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.