ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி

ஊருணியில் மூழ்கி சிறுவன் பலியானான்

Update: 2021-02-19 15:48 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள கீழச்சோத்தூரணி பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் கிஷோர் (வயது 14) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பிற்பகலில் தனது நண்பருடன் சோத்தூரணியில் குளிக்கச் சென்றார் அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது கிஷோர் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார். உடன் சென்ற நண்பர் அளித்த தகவல் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் வந்து தேடிப்பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி சகதிக்குள் சிக்கி பலியான கிஷோரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்