ஊருக்குள் காட்டெருமைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

தேவர்சோலை அருகே ஊருக்குள் காட்டெருமைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-19 15:43 GMT
ஊருக்குள் புகுந்த காட்டெருமை.
கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் நுழைந்து வருகிறது. கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின. பின்னர் அந்த காட்டெருமைகள் மச்சிக்கொல்லியில் இருந்து பேபி நகருக்குள் புகுந்து தெருக்களில் உலா வந்தன. 

அதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் சென்று கதவுகளை பூட்டிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பொதுமக்கள்  வீடுகளுக்குள் இருந்தபடி சத்தமிட்டு அவற்றை துரத்தினார்கள். 

இதனால் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறிய காட்டெருமைகள் அருகில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் புகுந்தன. அவற்றை விவசாயிகள் வனப்பகுதியை நோக்கி விரட்டினார்கள்.

மேலும் செய்திகள்