கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்று கோவிலில் ரதசப்தமி விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் ரதசப்தமி மாசி மாத கார்த்திகை பிஷ்மாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-02-19 12:54 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் ரதசப்தமி மாசி மாத கார்த்திகை பிஷ்மாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் வளர்பிறை சப்தமி திதியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கோவில்களிலும் ரதசப்தமி என்ற சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நாளில் உத்தராயன காலத்தில் மாசி மாத அமாவசைக்கு பின்வரும் சப்தமி திதியில் சூரிய பகவன் வடகிழக்கை நோக்கி ரதம் செல்லும் நாள் அன்று வெள்ளை எறுக்கு இலை தலையில் வைத்து நீராடினால் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி காலையில் கோவிலில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதணை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்