ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Update: 2021-02-19 06:10 GMT

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பையில் 4 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியதாக அந்த பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் பீனுல்ஹக் (வயது 26) என்பவரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் பஸ்சில் கடத்த முயன்ற கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

 

மேலும் செய்திகள்