ஓசூரில் நாய்கள் துரத்திய புள்ளிமானை மீட்ட பொதுமக்கள்

ஓசூரில் நாய்கள் துரத்திய புள்ளிமானை அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர்.

Update: 2021-02-19 05:48 GMT
ஓசூர்:
ஓசூரில் நாய்கள் துரத்திய புள்ளிமானை பொதுமக்கள் மீட்டனர்.
மான்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள நேரு நகருக்கு மத்திகிரி கால்நடை பண்ணை வழியாக நேற்று 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று வழிதவறி வந்தது. 
மேலும் மிரட்சியடைந்து திகைத்து நின்ற அந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்தின. இதில் உயிருக்கு பயந்து அந்த மான் ஒரு வீட்டுக்குள் புகுந்தது. 
மீட்பு
பின்னர் பொதுமக்கள், அந்த மானை மீட்டு பாதுகாப்பாக கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டு, சானமாவு காப்புக்காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்