நாமகிரிப்பேட்டை அருகே சிறுமி பலாத்காரம்; தொழிலாளி போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டை அருகே சிறுமி பலாத்காரம் தொழிலாளி போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியை, ஆறுமுகம் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
======