கொண்டலாம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கொண்டலாம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது.;
கொண்டலாம்பட்டி,
கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் சிவதாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிவதாபுரம் மொரம்புகாட்டை சேர்ந்த நாகராஜ் (வயது 47) என்பவர் தனது வீட்டின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 20 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.