சங்ககிரியில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு
சங்ககிரியில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு.
சங்ககிரி,
சங்ககிரி பழைய எடப்பாடி ரோட்டில் மிக பழமையான சிவியார் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை 5 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வந்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பூசாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து பூசாரி வந்து பார்த்த போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து திருடிச்சென்றது தெரியவந்தது.