பவானி டீக்கடையில் டீ குடித்த அமைச்சர் கே.சி.கருப்பணன்

பவானியில் உள்ள ஏழை-எளிய அ.தி.மு.க.வினருக்கு இலவச வேட்டி, சேலைகளை வீடு வீடாக சென்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் உட்கார்ந்து டீக்குடித்தார்.

Update: 2021-02-18 22:40 GMT
பவானி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பவானி நகரத்தில் வசிக்கும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வீடு, வீடாக சென்று வேட்டி-சேலைகளை வழங்கினார்.

அப்போது பவானி சொக்காரம்மன் பகுதியில் வசிக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த ஏழைப் பெண் குஞ்சம்மாள் என்பவரது வீட்டுக்கு சென்றார். அவரிடம் அமைச்சர், வேட்டி-சேலைகளை வழங்கினார். பின்னர் குஞ்சம்மாள், தன் வீடு அருகே இருந்த டீக்கடையில் அமைச்சருக்கு டீ வாங்கி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் அந்த கடையில் உட்கார்ந்து டீ குடித்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆர்வத்தோடு வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்