ஜேப்படி செய்த என்ஜினீயரிங் மாணவர் கைது
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் ஜேப்படி செய்த என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மேலசிந்தாமணி கொசமேட்டு தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவருடைய சட்டைப்பையில் இருந்து ரூ.500-ஐ ஜேப்படி செய்து கொண்டு தப்பி ஓடினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட தாமோதரன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர், வரகனேரி பகுதியைச் சேர்ந்த ஜெயந்த்முரளி (21) என்பதும், திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைதுசெய்தனர்.