புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுவை தர்மாபுரியை சேர்ந்தவர் புத்துப்பட்டன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ஜோதிகா (வயது20). இவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சில ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் ஜோதிகா அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.