புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 2-வது நாளாக நடந்தது

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-02-18 20:52 GMT
நாகப்பட்டினம்:-
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாநில செயலாளர் பிரேமச்சந்திரன் பேசினார்.
 கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும். ஜக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்