பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோடு,
மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு மாநகர், கிழக்கு மாவட்டம் சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சலீம், மாநகர செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கொரோனா தொற்றால் வேலை இழந்து அவதிப்படும் மக்களின் நிலையை உணராமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்திட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நூர்சேட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, தொகுதி செயலாளர் சண்முகம், த.மு.மு.க. நகர செயலாளர் எம்.சாகுல் அமீது, அலாவுதீன், பொருளாளர் சபுர் அலி, மாவட்ட துணைச்செயலாளர்கள் பி.சாகுல் அமீது, இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.