சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு சிறை
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு சிறை
மதுரை,பிப்
சோழவந்தானை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 42). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்தை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவில், ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் பேரில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா நேற்று தீர்ப்பளித்தார்.