கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

Update: 2021-02-18 20:33 GMT
மதுரை, பிப்
கோவில் சொத்து விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று மதுைர ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கட்டண விவரங்கள்
மதுரையைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த கோவில்களில் பட்டியல் வைக்க வேண்டும். பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் ெசய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, அறநிலையத்துறை கமிஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "கோவில் சொத்துகளை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போரிடம் இருந்து வரவேண்டிய ரூ.297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ.32.49 ேகாடி வசூலாகியுள்ளது’’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள நபர்களின் விவரம், அசையும் அசையா சொத்துக்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 8 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்