ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் கேரள மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கீழ ராஜகுலராமன் போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். இதில் சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கரபாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மருத்துவாமலை (வயது52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.