மாணவிகளுக்கு வேளாண் பணி அனுபவ பயிற்சி

மாணவிகளுக்கு வேளாண் பணி அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-02-18 20:14 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் வெங்காயம் மற்றும் வேளாண் காய்கறிகள் வணிக வளாகத்தில் தனியார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் வேளாண் இறுதியாண்டு மாணவிகளுக்கான ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி ெதாடக்கம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச விதை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை செயல் அலுவலர் சுபாஷினி, உதவி வேளாண் அலுவலர் துரைசாமி, கிருஷ்ணவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் தனலட்சுமி, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு, மாணவிகள் காய்கறி விதைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்