நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-02-18 20:06 GMT
நெல்லை:
நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்தினார்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.  அவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக வந்தார்.

அப்போது, வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு தினத்தையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அவரை த.மா.கா. நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், தென்காசி மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாநில செயலாளர் ஏ.பி.சரவணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
 
இதைத்தொடர்ந்து செல்லப்பாண்டியன் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு விழா கோரிக்கை

அப்போது, சுத்தமல்லி முருகேசன் முதல்-அமைச்சரிடம் கொடுத்த மனுவில், ‘‘செல்லப்பாண்டியன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்