தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பஸ்நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் செட்டியார்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் நீர் ஆத்திலிங்கம், வடக்கு தேவதானம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வனராஜ், முகவூர் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.