4-வது நாளாக உண்ணாவிரதம் 2 பேருக்கு உடல்நலக்குறைவு
4-வது நாளாக உண்ணாவிரதம் 2 பேருக்கு உடல்நலக்குறைவு
கரூர்
கொங்கு வேளாளர், சோழிய வேளாளர் உள்பட 40 உட்பிரிவுகள் கொண்ட வேளாளர்கள் பெயரை பள்ளர் உள்பட சில சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் மத்திய, மாநில அரசுகள் அந்த முயற்சியை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 15-ந் தேதியில் இருந்து அனைத்து வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன் தலைமையில் 80 அடி சாலையில் அனைத்து வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தனுக்கும், குமார் என்பவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 2 பேரும் காந்தி கிராமத்தில் உள்ள கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.