பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி
பெரியகுளம்-ஆண்டிப்பட்டி சாலையில் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் இருந்து பெரியகுளம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.
லாரியை முத்தனம்பட்டியை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர் ஓட்டினார். அந்த லாரி பெரியகுளம்-ஆண்டிப்பட்டி சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அருகே வந்தபோது டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்ைட இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வைகை அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை அருகில் உள்ள மற்றொரு பாலத்தில் திருப்பி விட்டனர்.
சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனர். இந்த விபத்தில் பாலத்தின் பக்கவாட்டு சுவர் மற்றும் தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன.