கஞ்சா விற்ற மூதாட்டி சிறையில் அடைப்பு
மதுரை கரிமேடு, கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை,
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 62). கஞ்சா வியாபாரியான இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் இனிமேல் இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என்று 2 நபர் உத்தரவாதத்துடன் கூடிய ஒரு வருட நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அவர் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே ராணி நன்னடத்தைக்கான பிணை பத்திரத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை வருகிற நவம்பர் மாதம் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.